2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'உர மானியத்துக்காக விவசாயிகளின் சரியான பட்டியல் வேண்டும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்கு விவசாய அமைப்புக்கள் சரியான பட்டியலை தரவில்லையென கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்தவருட சிறுபோக செய்கையில் 9,500 ஏக்கரில் நெற்செய்கையும் 1,500 ஏக்கரில் சிறுதானியச் செய்கையும் செய்யப்படுகின்றது. பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளில் 50 வீதமானவர்கள் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளனர். எனினும் அவர்களுக்கான உர மானியங்கள் இன்னமும் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் உதவி ஆணையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் தொடர்பான பட்டியலை விவசாய அமைப்புக்கள் இன்னமும் சரியாக வழங்கவில்லை. பட்டியல் வழங்கப்பட்ட பின்னரே உரமானியம் வழங்கமுடியும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரமானியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X