Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்த உதவி தொகை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில், உயர் கல்விக்கு தகுதி பெற்ற மாணவர்கள் குறித்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் குறித்த மாணவர்களின் உயர்கல்வி கற்றல் செயற்பாட்டுக்காக மாதாந்தம் தலா 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு 300 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 167பேருக்கு அவர்களுக்கான சான்றிதழ்களும் வைப்பு புத்தகமும் வெள்ளிக்கிழமை (10) கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில், பிரதேச செயலாளர் கோ.நாகேஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வாழ்வின் கிளிநொச்சி எழுச்சி திட்ட பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago
16 Jul 2025