Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
George / 2015 ஏப்ரல் 11 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் காணப்படுகின்ற மக்களின் வீடுகள், அண்மையில் இடித்தழிக்கப்பட்டுள்ளதுடன் சில வீடுகளின்; ஜன்னல்களும் கொத்தி சூறையாடப்பட்டுள்ளன.
1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று புதிய அரசால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக பகுதி பகுதியாக காணிகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக சனிக்கிழமை(11) வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள காணிகளின் ஒரு பகுதி இன்று மக்களின் பார்வைக்கு அனுமதிக்கபட்டது.
25 வருடங்களின் பின்னர் தமது காணிகளை பார்வையிட சென்ற மக்கள் அங்குள்ள நிலைமைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆர்.பிரேமதாசவின் வேண்டுகோளுக்கிணங்க வீமம் காமம் பகுதி மக்களுக்கு வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்ட நிலையில் வீட்டுத்திட்டத்தின் நினைவுக்கல் மட்டும் காணப்படுகின்றது.
மேலும் இப்பகுதியில் மீதமுள்ள வீடுகளின் கதவு, ஜன்னல்களின் நிலைகள் அனைத்தும் இரவோடு இரவாக உடைத்து சூறையாடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
1989ஆம் ஆண்டு, வீடுகள் எம்மிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் பால் பொங்குவதற்கு ஆயத்தமான நிலையில் இடம்பெயர்ந்து சென்றோம்.
25 வருடங்களின் பின்னர் வந்து பார்க்கின்றோம். வீடு தற்போது கற்குவியலாக காட்சியளிக்கின்றது என்று இடிக்கட்ட வீட்டின் உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago