2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கடலாமைகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பாஷையூர் சந்தைப் பகுதியில் இரண்டு பெரிய கடலாமைகளை வைத்திருந்த 2 சந்தேக நபர்களை சனிக்கிழமை (11) மாலை கைதுசெய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சுமார் 60 கிலோ எடையுள்ள கடலாமைகளும்; சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

கடலாமைகளை சந்தையில் வைத்து பங்குபோடுவதற்காக சந்தேக நபர்கள் முயன்றபோது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X