2025 ஜூலை 16, புதன்கிழமை

10 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, சில்லாலை பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் கஞ்சாவை புதன்கிழமை (15) மீட்டதுடன், அதனை மறைத்து வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் 5 பொலித்தீன் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை மீட்டனர்.

தொடர்ந்து மேலதிக விசாரணை மேற்கொண்டு அதேபகுதியை சேர்ந்த 19 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். விரிவான விசாரணைகளை போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X