2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மத்திய கல்லூரி கலையரங்கு அடிக்கல் நாட்டுவிழா

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தமிழ்த் தேசியத்தின் தந்தை அமரர் தந்தை செல்வா நிதியத்தின் 70 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள கலையரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா, திங்கட்கிழமை(27) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தந்தை செல்வாவின் மகன் எஸ்.சந்திரஹாசன் அடிக்கல்லை நாட்டினார்.

1500 பேர் அமரக்கூடிய விதத்தில் நவீன வசதிகள் கொண்டமைந்ததாக இந்தக் கலையரங்கு அமைக்கப்படவுள்ளது. 

2016ஆம் ஆண்டு யாழ்;ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ள நிலையில், 200ஆம் ஆண்டு நிகழ்வுகள் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்தக் கலையரங்கில் நடைபெறவுள்ளதாக அதிபர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .