2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மருதடி விநாயகர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.அரசரட்ணம்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் உண்டியல் திங்கட்கிழமை (27) அதிகாலை உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தின் காவலாளி தூங்கிக் கொண்டிருந்த தருணம் பார்த்து ஆலயத்துக்குள் உள்நுழைந்து, உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

காலையில் பூசை செய்வதற்காக வருகை தந்த பூசகரே உண்டியல் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஆலய பரிபாலன சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த ஆலயத்தில் கடந்த மாதமும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதுடன், ஆலயத்தின் பழைய விக்கிரகங்கள் சிலவும் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .