2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

15 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் சந்தையில் முத்திரையிடப்படாத நிறுவை அளவைகளை (தராசு) பயன்படுத்திய 15 வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவு தெரிவித்தது.

யாழ். மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் அதிகாரிகள், திங்கட்கிழமை (27) சுன்னாகம் சந்தைக்குச் சென்று அங்குள்ள மீன் சந்தையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்படும் தராசுகளை சோதனை செய்தனர்.

இதன்போது 15 வியாபாரிகள் தங்கள் தராசுகளுக்கு அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவின் முத்திரைகளை பதிக்கவில்லை. அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்தது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .