2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலா சென்றவர்களின் வீட்டில் அலுமாரியை திருட முற்பட்டவர்கள் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடொன்றின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமாரியை படி வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்ட 3 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (27) மாலையில் கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர்.

வட்டுக்கோட்டையிலிருந்து வாகனத்தில் சென்ற 4 நபர்கள், வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை உடைத்து உட்சென்று அங்கிருந்த அலுமாரியை வெளியில் கொண்டு வரமுற்பட்ட போது, அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சந்தேகம் கொண்டு அவர்களைப் பிடிக்க முற்பட்ட போது, ஒருவர் தப்பி ஓடியுள்ளார். மிகுதி மூவரும் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வீட்டில் இருந்தவர்கள் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .