2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு சந்தேகநபர் தப்பியோட்டம்

George   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் மூளாய் வேரம் பகுதியிலுள்ள மதுபானக் கடையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு, பொலிஸ் அதிகாரி மீது கத்தி குத்து இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கத்தி குத்து சம்பவத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆர்.லியனகே (வயது 50) என்ற பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்றுள்ளனர்.

அதன்போது, சந்தேகநபரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பொலிஸாரைத் தாக்கியதுடன், பொலி; அதிகாரியை, சந்தேகநபர் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அதனையடுத்து, தாக்குதலில் நெஞ்சிலும் கையிலும் கத்திக்குத்துக்கு இலக்காகிய குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலும் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .