2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'விடுவிக்கப்பட்ட பகுதியில் மீளக்குடியமர 825 குடும்பங்கள் பதிவு'

Thipaan   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொரண்குமார் சொரூபன்

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளின் 1,000 ஏக்கர் காணிகளில் மீளக்குடியமர்வதற்கு இதுவரையில் சுமார் 825 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், புதன்கிழமை (29) தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மீள்குடியேறும் மக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்வதற்கு 13 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் ஏற்கனவே தாங்களாகவே தங்கள் காணிகளை துப்புரவு செய்துள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள் என்பன விரைவில் மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்படும். அதற்கான முழுமையான நிதி எமக்குக் கிடைத்திருக்கின்றது.

மீள்குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் முன்னெடுத்திருக்கின்றது.

வீதிகள் அமைக்கும் பணிகளை தற்போது முன்னெடுக்கின்றோம்.முதற்கட்டமாக 70 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .