Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
செம்மரம் கடத்திய குற்றச்சாட்டில் 20 அப்பாவி கூலித்தொழிலாளர்கள் தென் இந்திய, ஆந்திர பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு வடமாகாண சபையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற போது, முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பஸ்ஸில் பயணித்த 20 கூலித்தொழிலாளர்களைக் கைது செய்த ஆந்திர பொலிஸார், அவர்கள் செம்மரம் கடத்தியதாக குற்றம் சுமத்தி சுட்டுக்கொன்றது.
இது அநியாயமான செயல். தமிழர்கள் என்ற காரணத்தால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்களா? முன்னைய சம்பவங்களை இது மீண்டும் ஞாபகப்படுத்துவதாக அமைகின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago