Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அதிவேகமாக பேரூந்தை ஓட்டிச் செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளின் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஜ.விதிசிங்க தெரிவித்தார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட 8 பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பிரதிநிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோருக்காக போக்குவரத்துத் தொடர்பான கலந்துரையாடல், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், பேரூந்து சாரதிகள் பேரூந்தை அதிவேகமாகச் செலுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கும்;, போக்குவரத்துச்சபையினருக்கு இடையேயான போட்டியால்; அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து சபையின் நேரசூசியில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் கூறினர்.
இதில் கருத்துத் தெரிவித்த இளவாலை போக்குவரத்து பொறுப்பதிகாரி, பண்டத்தரிப்பு முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை மாற்றி வேறு ஒரு இடத்தில் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடப்பட்டது. ஆதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துக்களின் போது, நான்கு பேர் உயிரிழந்தனர்.
இனி வரும் காலங்களில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் பகல், மற்றும் இரவுநேர வீதி ரோந்துக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஜீ.தனுஸ்க பிரசன்னா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago