2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

திருட்டுடன் தொடர்புடைய நால்வர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை வியாழக்கிழமை (30) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட எல்.சீ.டி தொலைக்காட்சி பெட்டி, 04 அலைபேசிகள், மிக்சி, கிறைண்டர், றைஸ்குக்கர் மற்றும் 04 நீர் இறைக்கும் மோட்டார்கள் என சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸ் குழு 28, 30, 45 மற்றும் 50 வயதுடைய சந்தேகநபர்களை கைது செய்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .