2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஒடுக்கப்பட்ட தொழிலாளரகளின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடுக்கப்பட்டுலுள்ள தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும் என வலிகாமம் மேற்குப் பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்தார்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவரால் வியாழக்கிழமை (30) அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த நாள் வரலாற்று ரீPதியான பெருமை மிக்கநாள். தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட புனித நாள். இந்த நாள் தொழிலாளர்களின் உன்னதமான தியாகத்தின் திருநாள். இந் நன்நாளில் இன்றும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு உள்ள தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இன்று வரை அழிக்கப்பட்டு இடுகாடு ஆக்கப்பட்ட எமது தாயகத்தின் பல பாகங்களிலும் தாக்கப்பட்டு தொழில் இழக்கப்பட்ட தொழிலாளர்கள், மீண்டும் தமது தொழில் உரிமைகளைப் பெறவேண்டும்.

மேலும், திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட எமது புனிதமான மருத நிலங்கள் மீண்டும் மலர்ச்சி பெறவும் பரம்பரையாகவும் தலைமுறையாகவும் எமது என்று மார்தட்டிய நெய்தல் எமக்காகவும் கொடிய யுத்தத்தின் வாயிலாக அழிக்கப்பட்ட முல்லைகளும் அவற்றின் பசுமைகளும் மீண்டும் செழிக்கவும் எமது நிலம் எமது உரிமை என்ற உயரிய உன்னதமான கோசங்கள் வான் வெளிகளுக்கு அப்பால் எம் காவிய நாயகர்களின் காதுகளில் ஒலித்திட ஒன்று பட அனைவரும் எழுந்து வாருங்கள் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .