2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை களஞ்சியறை உடைத்துத் திருட்டு

Gavitha   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நாகர்கோயில் புனிதநகர் தமிழ்கலவன் பாடசாலையின் களஞ்சிய அறையை உடைத்து புதன்கிழமை (29) இரவு உள்நுழைந்து அங்கிருந்த சமையல் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

களஞ்சிய அறையில் இருந்த 50 கிலோகிராம் அரிசிஇ 35 டின்மீன்கள்இ 5 லீற்றர் மரக்கறி எண்ணெய் என்பன திருடப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
இந்தப் பாடசாலையில் ஏற்கெனவே மூன்று தடவைகள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .