Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
மத்திய அரசாங்கத்தால் வடமாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக வடமாகாண சபையின் ஆலோசனை மற்றும் அங்கிகாரத்தை பெற்று செயற்படுத்துமாறு மத்திய அரசின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை கோருவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற போது, இந்தப் பிரேரணையை ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் முன்வைத்தார்.
இந்தப் பிரேரணையுடன் லிங்கநாதனால் முன்வைக்கப்பட்ட, யுத்தத்தால் இடம்பெயர்ந்து கடந்த 20 வருடங்களாக வவுனியா சிதம்பரம் நலன்புரி நிலையத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழந்துவரும் 187 குடும்பங்களுக்கு அதேயிடத்திலேயே காணிகள் வழங்குவதற்கு சபையின் அங்கீகாரத்தைப் பெறுதல், வடமாகாண சபையின் தலைமைக்காரியாலயம் மாங்குளத்தில் நிறுவவேண்டும் மற்றும் வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வடமாகாண சபையின் உபஅலுவலகம் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய இரண்டு பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025