2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.நகரத்தில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.நகர்ப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் பின்பக்கத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மலசலகூடத்துகுள் இருந்து பழுதடைந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று (30) தெரிவித்தனர்.

குறித்த ஆயுதங்களை மீட்டுள்ள போதிலும், வெடிக்கும் அபாயம் இருப்பதால் அதனை அவ்விடத்தில் வைத்து அழிப்பதற்காக இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை (01) அல்லது சனிக்கிழமை (02) இந்த வெடிபொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .