2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வடமாகாண சபைக்குப் புதிய உறுப்பினர்

Administrator   / 2015 மே 03 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரபாகு கனகசுந்தரசுவாமிக்கு பதிலாக புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் வடமாகாண சபை உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், கனகசுந்தரசுவாமி கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இயற்கையெய்தினார். இவரது இடம் வடமாகாண சபையில் கடந்த மூன்று மாதகாலமாக வெற்றிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் புதிய உறுப்பினராக கந்தையா சிவனேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளெட் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுவிரைவில் இவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .