2025 ஜூலை 12, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய இடம் முற்றுகை

Sudharshini   / 2015 மே 03 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

கிளிநொச்சி விசுவமடு றெட்பானாவில் இயங்கி வந்த கசிப்பு   காய்ச்சும் இடத்தை சனிக்கிழமை (02) சுற்றிவளைத்து சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ததாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி றொகான் சஞ்சேராஜ் தெரிவித்தார்.

கசிப்பு காச்சும் நடவடிக்கை வீடொன்றில் இடம்பெற்று வந்ததாகவும் அங்கிருந்து 30 போத்தல் கோடா, 8 போத்தல் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட விசேட மது ஒழிப்பு நடவடிக்கையின் போதே மேற்படி கசிப்பு சாச்சும் இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .