Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மே 13 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வடமாகாணத்துக்கென ஒரு வீதி அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்குவதற்கான நியதிச் சட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளேன். இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும் வடமாகாணத்துக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபை இயங்கத் தொடங்கும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,
வடமாகாண சபைக்குட்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக இந்தாண்டு சுமார் 136 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு 36 மில்லியன் ரூபாயும் ஏனைய 4 மாவட்டங்களுக்கு தலா 25 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
1 கிலோமீற்றர் வீதியை காப்பெற் வீதியாக அமைப்பதற்கு 35 மில்லியன் ரூபாய் வேண்டும். வடமாகாணத்தில் மிகவும் மோசமான முறையில் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையிலுள்ள வீதிகளை ஒதுக்கிய நிதி மூலம் கிறேசர்கள் கொண்டு நிரப்பில் முதற்கட்டமாக திருத்தும்படி அறிவித்துள்ளேன்.
அடுத்த கட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பவற்றின் உதவியுடன் இந்த வீதிகளை முழுமையாக திருத்த நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும். போரால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் அதிகம் செய்யவிருப்பதால், நிதி உதவி செய்யும் நிதி நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டவேண்டும் என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago