2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இந்து சமயத்தின் சமகால நிலமை தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் ஆராய்வு

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் இந்து சமயத்தின் சமகால நிலமை தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டமொன்று வெள்ளிக்கிழமை (29) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், இந்து கலாசாரத் திணைக்களப்பணிப்பாளர் உமாமகேஸ்வரன், யாழ். அரச அதிபர் நா.வேதநாயகன், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள், கலாசார உத்தியோகஸ்தர்கள், சின்மயா மிசன், இராமகிருஸ்ண மிசன் போன்றவற்றின் பிரதிநிதிகள் போன்ற பலர் கலந்துகொண்டனர்.

இங்கு, அறநெறிக் கல்வியை வலுவூட்டல், ஆலயங்களை மையமாகக் கொண்டு சமுதாயப் பணிகளை முன்னெடுத்தல், ஆலயங்களில் மிருக பலியை முற்றாக நிறுத்துதல், ஆலயங்களில் உள்ள பிணக்குகளுக்கு தீர்வு காணுதல், சமய நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைவை ஏற்படுத்தல், புதிய அறநெறி வகுப்புக்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

ஆலயங்களில் மிருக பலியை நிறுத்துமாறு கோரி சைவ மகா சபையின் ஏற்பாட்டில் யாழ். குடாநாட்டில் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் அடங்கிய மகஜரை சைவ மகா சபையின் சார்பில் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் இந்து கலாசாரப் பணிப்பாளரிடம் கையளித்தார்.

இதன்போது, மிருக பலியை முற்றாக நிறுத்துவதற்கான விசேட சட்டமூலம் ஒன்று விரைவில் இந்து கலாசார அமைச்சினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இந்து கலாசாரப் பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை மூடி மாணவர்களை அறநெறி வகுப்புக்களுக்கு அனுப்புவதற்குரிய ஒழுங்குகளை தான் மேற்கொள்வதாக யாழ். அரச அதிபர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .