Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Thipaan / 2015 மே 31 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதிக்கு, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கீறிற்; லோகீன் தலமையிலான குழுவினர், சனிக்கிழமை (30) விஜயம் செய்தனர்.
மீள்குடியேறிய பொதுமக்களுடன் கலந்துரையாடிய அக் குழுவினர், மீளக்குடியமர்வதற்கான உதவிகளை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக செய்து தருவதாக உறுதியளித்தனர்.
இதன் போது நிலமைகளை நோர்வே குழுவுக்கு தெரிவித்த பொதுமக்கள், 'எமது வாழ்வதாரம் கடலை நம்பியே உள்ளது. கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு போதிய வாழ்வாதர உதவிகள் வழங்கப்படவில்லை.
இங்கு மீள்குடியமர்ந்த 113 குடும்பங்களில் 15 மீனவ குடும்பங்கள் மட்டுமே கட்டுமர தொழில் மேற்கொள்கின்றனர். மீள் குடியமர்ந்து 03 மாதங்கள் கடந்தும் இதுவரை நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.'
மேலும் 'போக்குவரத்து வசதி இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் குறைவு, இவ்வாறான நிலையில் எமது வாழ்வதாரத்தினை கொண்டு நடத்துவது கடினமாக உள்ளது.
நாம் மீனவ குடும்பமாக இருந்தும் மீன்பிடியில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றோம். கூலி வேலைகளுக்கு சென்று தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த வேண்டியுள்ளது. எங்களுடைய வாழ்வாதாரத்தினை மேற்படுத்தவும் படகில் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவும் வான்களை திருத்தி தருமாறு கேட்டுக்கொண்டனர்.'
மேலும் 24 குடும்பங்களுக்கு சர்வதேச தொண்டு நிறுவனம் ஊடாக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கும் வீட்டுத்திட்டத்தினை பெற்று தருமாறு கோhரிக்கை விடுத்துள்ளதுடன், நிரந்தர வீடுகளை நோர்வே அரசாங்கம் அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.'
இதன் போது கருத்து தெரிவித்த தூதுவர்,
'கணவனை இழந்த பெண்களில் வாழ்வதாரத்தினை மேலும் மேம்படுத்துவதற்கு, சுயதொழில் வசதிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாக பெற்று தருவதுடன், மீள் குடியமர்ந்த உங்களுக்கு நிரந்தர வீடுகளை நோர்வே அரசாங்கம் ஊடாக பெற்று தருவதாக உறுதியளித்தார்.'
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago