2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி

Gavitha   / 2015 மே 31 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சித்தன்கேணியில் வசிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு புலம்பெயர்வாழ் அன்பர் ஒருவரின் உதவியில் கோழி வளர்ப்புக்காக கூரைதகடுகள், கம்பிவலைகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தாயகத்து உறவுகளைத் தலை நிமிர வைப்போம் என்ற செயற்றிட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் இதனை பயனாளியிடம் சனிக்கிழமை (30) கையளித்தார்.

தாயகத்து உறவுகள் தலைநிமிர வேண்டும் என்ற மிகப்புனிதமான இவ்வாறான செயல்களை மேற்கொள்ளும் மேற்கொள்ள தயாராகவுள்ள அனைத்து புலம்பெயர் உணர்வாளர்கட்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இவ்வாறான செயற்றிட்;டங்களுக்கு  கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உறுதிப்படுத்தலுடன் வழங்கப்படுகின்றது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .