2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமகால முகாமைத்துவ ஆய்வரங்கு

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அறிவைப் பகிர்வதன் ஊடாக படைப்பாற்றலை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளிலான சமகால முகாமைத்துவ ஆய்வரங்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி ஆய்வரங்கிற்கு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஆய்வரங்குக்கான குழு அறிவித்துள்ளது.

இந்த ஆய்வரங்குக்கு கணக்கீடும் நிதியும் வங்கியியலும் காப்புறுதியும் வணிகப் பொருளியல் வணிகமும் சட்டச் சூழலும் முயற்சியாண்மையும் செய்பாட்டு முகாமைத்துவமும் சூழல் முகாமைத்துவம் சமூகப் பாதுகாப்பு தகவல் தொழில்நுட்பமும் தொடர்பாடலும் சர்வதேச வியாபாரமும் நிதியும் அறிமுகாமைத்துவமும் சந்தைப்படுத்தலும் விநியோகச்சங்கிலி முகாமைத்துவமும் செயற்பாட்டு ஆய்வு நிறுவன நடத்தையும் மனிதவளமுகாமைத்துவமும் தந்திரோபாய முகாமைத்துவம் சுற்றுலாத்துறை விருந்;தோம்பல் மற்றும் நிகழ்வுமுகாமை ஆகிய தலைப்புக்களில் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் ஆய்வுச் சுருக்கமும் 15ஆம் திகதிக்கு முன்னர் ஆய்வுச்சுருக்கம் ஏற்பறிவிப்பும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஆய்வுக்கட்டுரை கையளிப்பும் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் ஆய்வுக்கட்டுரை ஏற்பறிவிப்பும் 21ஆம் திகதி ஆய்வரங்குபதிவும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆய்வரங்கும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .