2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இந்திய வியாபாரி கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 01 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரி ஒருவரை, இளவாலை - சீனிப்பந்தல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் ஜெயராம் குமார் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 பயணப் பொதிகளில் புடைவைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .