2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உள்ளூர் படைப்பாளிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

George   / 2015 ஜூன் 02 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்களை கொள்முதல் செய்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்களில் அவற்றை வைப்பதற்கான நடவடிக்கையை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

படைப்பாளிகளிடமிருந்து நூல்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை பிரதேச சபையின் நிதிக்குழு வழங்கியதையடுத்து இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பல எழுத்தாளர்கள் சுதந்திரமான முறையில் தங்கள் மனதில் தோன்றும் நல்ல கருத்துக்களை மக்களுக்கு பயன்படும் வகையில் நூல் வடிவமாக எழுதி வெளியிட்டு வருகின்றார்கள்.

வாசகர்கள் மத்தியில் குறிப்பாக மாணவர் மத்தியில் நல்ல சிந்தனைகளையும் கருத்துக்களையும் பதிய வைக்கும் வகையிலும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் தரமான நூல்களை கொள்வனவு செய்து நூலகங்களில் காட்சிப்படுத்தவுள்ளதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .