2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஜேர்மன் தூதுவர் ஜூர்ஜன் மொர்ஹாட் கிளிநொச்சிக்கு விஜயம்

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை, மாலைதீவுக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் ஜூர்ஜன் மொர்ஹாட் புதன்கிழமை (03) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சியில் ஜேர்மன் நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் இலங்கை தொழிற்பயிற்சி திணைக்களத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

தொழிற்பயிற்சி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்டதுடன் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜேர்மன் நிதியுதவியில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்டு வரும் வடமாகாண தொழிற்பயிற்சி நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் தூதுவர் பார்வையிட்டார். தூதுவருடன் ஒரு குழுவினரும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .