2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வருமானப் பரிசோதகர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 30 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண வருமானப் பரிசோதகர்கள் தொழிற்சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் யாழ்.பொதுநூலக மகாநாட்டு மண்டபத்தில், தொழிற்சங்க-எஸ்.அரசரட்ணம்

வடமாகாண வருமானப் பரிசோதகர்கள் தொழிற்சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் யாழ்.பொதுநூலக மகாநாட்டு மண்டபத்தில், தொழிற்சங்கத் தலைவர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் புதன்கிழமை (01) நடைபெறவுள்ளது.

அண்மையில் மத்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய சேவைப் பிரமாணம் உருவாக்கல் மற்றும் சம்பளம் போன்ற விடயங்கள் இந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

வடமாகாண சபை பொதுச் சேவையில் வருமானப் பரிசோதகர்களாக கடமையாற்றுபவர்களை தரம் 111, தரம் 11இற்கு உள்வாங்குவதற்கான வினைத்திறன் தடைகாண் பரீட்சை ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் தொடர்பிலான விளக்கங்களும் இதன்போது வழங்கப்படவுள்ளதாக வருமானப் பரிசோதகர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .