2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கத்தியால் குத்தியவருக்கு மரணதண்டனை

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், இன்று வியாழக்கிழமை (02) தீர்ப்பளித்தார்.

கொடிகாமம், மந்துவில் கிழக்கில் 2006 ஓகஸ்ட் 27ஆம் திகதி நடைபெற்ற இந்த கொலைச் சம்பவத்தில், இளையவன் குஞ்சையா என்பவர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் ஆனந்தம் எஸ்லிம் (வயது 41) என்பவர், கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில், அக்காலப் பகுதியில் நீதிபதியாக இருந்த பிரேம்சங்கர் முன்னிலையில் நடைபெற்று வந்தமையால் இது தொடர்பான தீர்ப்புக்காக யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு தற்போதைய வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் இன்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அந்நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .