2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹிந்தி மொழி தெரிந்த வடமாகாண மக்களை பதிவுசெய்ய நடவடிக்கை

George   / 2015 ஜூலை 03 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்தி மொழியை பேசவோ. எழுதவோ அல்லது வாசிக்கவோ தெரிந்த வடமாகாண மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை யாழ். இந்தியத் துணைத்தூதரகம் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தால் வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகமானது 2010ஆம் ஆண்டு நவம்பரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. 

தூதரகமானது தற்பொழுது, வட மாகாணத்திலுள்ள ஹிந்தி மொழி பேசக்கூடிய மக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றது.

ஹிந்தி மொழியை பேசவோ, எழுதவோ அல்லது வாசிக்கவோ தெரிந்தவர்கள் இந்தியத் துணைத்தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளவும். 

பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தூதரக இணையத்தளத்திலிருந்து (றறற.உபதையககயெ.ழசப) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை உபi.தயககயெளூபஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது இந்தியத் துணைத்தூதரகம், இல.14, மருதடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .