Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 03 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தமிழ்த் தேசிய விரோத செயலில் ஈடுபடுபவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'விடுதலை புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பெண்களை மதிக்காதவர்களுக்கு, பெண்கள் எமது கண்கள் போன்ற பெண்களை பற்றிய உயர்வான வசனங்களை கத்த சொல்லி தண்டனை வழங்குவார்கள்.
அதேபோன்றே அவர்களின் காலத்தில் தமிழ்த் தேசிய விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை ஒரு கூட்டாக ஒன்று கூட்டி தமிழ் தேசியத்தை பற்றி உயர்வாக கத்த சொல்லி தண்டனை வழங்கினார்கள். அவர்களே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூறுகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் அனைவருமே விடுதலை புலிகளின் பிஸ்டல் குழுவின் இலக்கில் இருந்தவர்கள். புலிகளால் தமிழ் தேசியத்தை உரக்க கத்த சொல்லி தண்டனை வழங்கப்பட்டவர்கள், தற்போது அதனை தேர்தல் கோஷமாக கத்துகின்றார்கள்.
அந்தக் குழு தமிழ் மக்களின் நலனில் அக்கறை இல்லாது தமது நலனில் அக்கறை கொண்ட குழு' என அவர் மேலும் கூறினார்.
நீதிமன்றத்தின் மீது கல் வீசி தாக்குவது எமது கட்சியின் கொள்கை இல்லை. யாழ். நீதிமன்ற கட்டட தொகுதி மீது கடந்த மே 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னால் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எமது கட்சி உறுப்பினர்கள் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என எவரேனும் ஆதாரபூர்வமாக நிரூபித்தால் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்.
நான் அரச அதிகாரத்தில் இருந்திருந்தால் அன்றைய தினம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதவாறு தடுத்து நிறுத்தி இருப்பேன் என்றார்.
27 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago