2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புலிகளுக்கு உதவிய இராணுவ அதிகாரி விடுதலை

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு இராணுவத்தினரின் தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பட்டத்துவ ஆராய்ச்சிஹே அசிதபிரபா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரது வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, அங்கிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.  

இவர் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் குற்றமற்றவர் என அவரை இனங்கண்ட யாழ். மேல் நீதிமன்றம் வழக்கிலிருந்தும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .