Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
உயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து இன்று சனிக்கிழமை (04) பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்கு கடற்படையினரால் அனுமதிக்கப்பட்டுள்ள நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில், மக்கள் மீளக்குடியேறவும் தமது காணிகளை துப்பரவு செய்யவும் சுமார் இருபது பேர் வரை உடனடியாக பதிவு செய்துள்ளதாக பிரதேச செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள சுமார் 35 ஏக்கர் வரையான காணி மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட காணிகள் கடற்படையினர் வசம் இருந்து வந்தது. இன்று சனிக்கிழமை (04) திடீரென குறித்த காணிகள் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டதும் குறித்த காணி உரிமையாளர்கள் உடனடியாக குறிப்பிட்ட பிரிவின் கிராம அலுவலரிடம் சென்று தமது குடியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago