Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 05 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அரசியல் கட்சிகள் தோன்றுவதும் அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஜனநாயக உரிமை. அதை மறுப்பதும் தடுப்பதும் அப்பட்டமான ஜனநாயக மறுப்பாகும். முன்னாள் போராளிகள் வெறுமனே புனர்வாழ்வு பெற்றுவிட்டு ஊமைகளாக உறங்கிக்கொண்டிருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.
புதிய கட்சிகளின் வரவை எண்ணி சிலர் அச்சப்படுவது தாம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கை மீதான நம்பிக்கையீனங்களையே எடுத்துக்காட்டுகிறது. எமக்கென்றொரு இலட்சியக்கனவு உண்டு. அதற்கான நம்பிக்கை தரும் யதார்த்த வழியும் கொண்ட கொள்கையின் உறுதியும் எம்மிடம் உண்டு.
எந்தவொரு புதிய கட்சிகளின் வரவையும் நாம் நேசமுடன் வரவேற்போம் என்றும் தயாராகவே இருப்போம். ஆயிரம் பூக்கள் மலரட்டும். ஒவ்வொரு கட்சிகளும் எமது மக்களின் இலட்சிய நலன் சார்ந்து யதார்த்த வழியில் செயலாற்றி புனித இலட்சிய பயணம் தொடரட்டும். அனுபவங்களை பாடங்களாக ஏற்று திருத்தி எழுதிய பாதையில் தீர்வின் திசை நோக்கி யார் வந்தாலும் வரவேற்போம்' என்று அவர் மேலும் கூறினார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago