2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காசோலை மோசடி: சந்தேக நபர் கைது

Thipaan   / 2015 ஜூலை 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி, மாலுசந்தி பகுதியில் உள்ள புகையிலை வர்த்தகர் ஒருவரிடம் 5 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான புகையிலையை கொள்வனவு செய்து காசோலை மோசடி செய்த, நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (05) நாவலப்பிட்டி பகுதியில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர் என காங்கேசன்துறை பொலிஸார், செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தனர்.

சந்தேக நபர் நெல்லியடி மாலுசந்தி பகுதியினை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் குறித்த பெறுமதியில் புகையிலை கொள்வனவு செய்துள்ளார். அதற்கு 5 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதிக்கு இரண்டு காசோலைகளை வழங்கியுள்ளார்.

வங்கியில் வைப்பில் இடப்பட்ட இரண்டு காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் மீள திரும்பியுள்ளது.

இது தொடர்பில் வர்த்தகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தருவதாக கூறிய சந்தேக நபர் தொடர்ந்தும் பணத்தை வழங்காது காலத்தினை இழுத்தடித்து வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் இது தொடர்பில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்திருந்;தார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை நாவலப்பிட்டியில் வைத்து கைது செய்திருந்தனர்.

அத்துடன் சந்தேக நபரை திங்கட்கிழமை (06) நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது வழக்கினை விசாரித்த நீதவான், புதன்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு இதன் போது பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபரை புதன்கிழமை(08) சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும்  உத்தரவிட்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .