2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முன்னாள் போராளிக்கு பிணை

Menaka Mookandi   / 2015 ஜூலை 08 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த போது திங்கட்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை 75,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (07) அனுமதியளித்தார்.

அத்துடன், மேற்படி சந்தேகநபர் புனர்வாழ்வு பெற்றாரா, இல்லையா என்பது தொடர்பில் விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையான ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி, மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்லிப்பளை பொலிஸாருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவர், கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளை மீளஉருவாக்கும் செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .