2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பொலிஸாருக்கே மதுபானம் விற்றவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை கடையில் வைத்து விற்பனை செய்த ஒருவரை செவ்வாய்க்கிழமை(07) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் புதன்கிழமை (08) தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சிவில் உரையில் சென்ற  பொலிஸார் மதுபானத்தை கொள்வனவு செய்வது போல், பாசாங்கு செய்து, சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரிடமிருந்து 180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 15 மதுபான போத்தல்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .