2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூலை 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வடமராட்சி கிழக்கு, குடத்தனையிலுள்ள ஆரம்பப் பிரிவு கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 5 மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா புதன்கிழமை (08) உத்தரவிட்டார்.

பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் ஆய்வின் பிரகாரம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.

புதன்கிழமை (08) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இவர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .