2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

George   / 2015 ஜூலை 09 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நா.நவரத்தினராசா

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில் - மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30), மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரின் தகவல்களை தந்துதவுமாறு சுன்னாகம் பொலிஸார் கோரியுள்ளனர்.

மல்லாகம் நீதிமன்றத்தால் புதன்கிழமை (08) பிறப்பிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் தகவலை கோரியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

இவர்கள் காணாமற்போனமை தொடர்பில் குடும்பஸ்தரின் மனைவி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இதுவரையில் அவர்கள் தொடர்பிலான எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்தவர்கள் 021 2240323 என்ன தொலைபேசி இலக்கம் அல்லது பொறுப்பதிகாரியின் 0774673943 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி பொலிஸார் கோரியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .