Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 11 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சங்கானை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வேலணையில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற தனது முழு ஒத்துழைப்பு மற்றும் நிதி அன்பளிப்பு செய்த செல்வி.தி.திருவருட்செல்வி கலந்து கொண்டு மருத்துவ முகாமை ஆரம்பித்தது வைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் இலைக்கஞ்சி சத்துணவு வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் மருத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
சங்கானை லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306பி1 மாவட்டத்தின் வலயத் தலைவர் லயன் பெண்மணி தவானந்தி சந்திரகாந்தன், வேலணை மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.நடேசராஜா டாக்டர் திருமதி.எழிளினி கோகுலன், சங்கானை லயன்ஸ் கழகத்தின் இயக்குனரும் சமாதான நீதவானும் லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி செயற்றிட்ட இணைப்பாளர் லயன் பெண்மணி மயூரிக்கா றஜீவன் லிங், இயற்கை ஆயுர்வேத மருத்துவ உற்பத்தி நிறுவனத்தின் வடமாகாண விநியோகஸ்தர் டாக்டர் அ.ஜெயக்குமார் கிராம சேவையாளர் எஸ்.குலசிங்கம் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago