Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
காய்ச்சலுடன் கூடிய வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், யாழ். போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், 8ஆம் வட்டாரம், வேலணையைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களுமேயான விஜயதாஸ் விஜித் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வேலணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இக்குழந்தை, சனிக்கிழமை (08) மாலை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு ஏற்பட்ட நோய் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .