2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தமிழர்கள் மீதான சர்வதேசத்தின் 'நம்பிக்கை அற்றுப்போகும்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

'முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்படவில்லை என மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டால், சர்வதேசம் முழு தமிழர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும்' என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக - வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் உள்ள வடமாகாண பேரவைக் கட்டடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளது என அனைவரும் வாதம் புரிகின்றார்கள். அதனடிப்படையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்படுமாயின், அதன் பின்னர் தமிழர்கள் சொல்லும் அனைத்தும் பொய் என சர்வதேசம்  எண்ணும்  நிலைமை ஏற்படும்.

எனவே, இவ்வாறான விடயங்களை நாம், மாகாண சபையில் பிரேரணை கொண்டுவந்து ஆர்ப்பரித்து செய்யக்கூடாது. இதனை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டிருக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X