Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிருஷந்தன், இன்று (21) உத்தரவிட்டார்.
மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பிரத்தியேக உடமைகளை மீள வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான், விடுதலை செய்துள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை களத்தின் உதவிப்பணிப்பாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 21 இந்திய மீனவர்களும் 2 இழுவைப்படகுடன் வடக்கு மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர்.
இதன்போது கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினூடாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 May 2025
24 May 2025