2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரூ.50 கோடி செலவில் யாழ், முல்லை மாவட்டங்களில் அபிவிருத்தி திட்டங்கள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 29 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி நிர்வாகத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கென ஐம்பது கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர மாவட்டத்தில் உள்ள 115 உள்ளுர் வீதிகள் 39 கோடியே 30 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், துணுக்காய் மற்றும் கரைத்துரைப்பற்று, ஆகிய பிரதேச சபை கட்டிடங்களும் இந்த நிதியின் மூலம் புனரமைக்கப்படட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X