2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

9 ஆவது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 26 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

9 ஆவது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று (26) யாழில் ஆரம்பமானது.

யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெறும் இக்கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய தொழில் துறை அமைச்சர் தயாகமகே, சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில், இந்திய வர்த்தக தொழித்துறை மன்றங்களை ஒன்றிணைந்த “அசோக் சாம்" அமைப்பில் உள்ள 75 இந்திய நிறுவனங்கள் நேரடியாக பங்கு பற்றியுள்ளது.

இதேவேளை மூன்று தினங்கள் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .