2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

CCTVயால் சிக்கிய சிறார்கள் நன்னடத்தை பாடசாலையில்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சங்கத்தானைப் பகுதியிலுள்ள அலைபேசி விற்பனை நிலையத்தின் கூரையைப் பிரித்து, உள்நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரையும், எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அச்சுவேலி நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

கடையின் கூரையை கடந்த 9ஆம் திகதி இரவு, பிரித்து இரண்டு சிறுவர்கள் கடைக்குள் இறங்கியுள்ளனர்.

அவர்கள் திருடும் காட்சி, கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெராவில் பதிவானதுடன் அந்த காட்சிகள் உரிமையாளரின் அலைபேசி திரையிலும் தோன்றியுள்ளன. (சி.சி.டி.வி கமெராவில் பதிவாகும் காட்சிகள், தனது அலைபேசி திரையிலும்  உடனடியாக பார்க்கும் வகையிலான தானியங்கி தொழிநுட்பத்தைப் உரிமையாளர் பயன்படுத்தியுள்ளார்)

அதனைப் பார்த்த உரிமையாளர், உடனடியாக கடைக்குச் சென்று சிறுவர்களை மடக்கிப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதனையடுத்து, இரண்டு சிறுவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X