A.P.Mathan / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
'ஹான்டில்'லுக்குப் பதிலாக காரின் 'ஸ்ரியரிங்', மிதிப்பானிலிருந்து இரண்டு புறமும் சங்கிலி, மோட்டார் சைக்கிளின் பாகமொன்றினால் உருவாக்கப்பட்ட 'பிரேக்' என்று விநோதமாக வடிவமைக்கப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டியொன்றில் - அட்டாளைச்சேனைப் பிரதேசம் முழுக்க மிக சாதாரணமாகப் பயணிக்கும் நபரொருவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள் மக்கள்!
துவிச்சக்கர வண்டியினை செலுத்தி வந்த மேற்படி நபரை விசாரித்தால், இதை இப்படி அமைத்தவர் வேறொருவர் என்கிறார்.
சுமார் 40, 50 வருட காலமாக துவிச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களைத் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் நபரொருவர்தான் இந்த வாகனத்தை இப்படி வடிவமைத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்துதான் புதிய கண்டு பிடிப்புகளும், விநோதங்களும் துவங்குகின்றன. ஆனாலும் இப்படியான கண்டுபிடிப்பின் மூலமாக சக்தி விரயமாவது தடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு சங்கிலிகள் சுழல்வதால் அதிக சக்தியினை பெறக்கூடியதாக இருக்கும்.
பழயனவற்றை புதிய வடிவாக மாற்றியமைத்து பாவிப்பதில் இளைஞர்கள் இப்பொழுதெல்லாம் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்குமானால் பல நல்ல காரியங்களையும் இவர்களால் செய்ய முடியும் என்பதை மறுத்துவிட முடியாது.



abullah Tuesday, 10 May 2011 07:25 PM
நான் பலமுனை
Reply : 0 0
Ijas Tuesday, 10 July 2012 07:02 AM
இந்த காலத்தில இதெல்லம் சரிவராது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .