Princiya Dixci / 2017 மே 21 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
“பொலிஸாரும் பொதுமக்களும் கூட்டாக இணைந்து செயற்படுவதன் மூலமே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்” என, முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, முந்தல் பொலிஸாரின் செயல்பாடுகள் தொடர்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முந்தல் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப்பொருள் பாவனை , விற்பனை ஆகிய குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான குற்றச் செயல்களினால் பொதுமக்களின் குடும்பக் கட்டமைப்பில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன.
“எனவே, இவ்வாறான குற்றச் செயல்களை பிரதேசத்தில் இருந்து கட்டுப்படத்துவதற்கு, பொதுமக்கள் அதுதொடர்பில் பொலிஸாருக்கு உதவிபுரிய வேண்டும். எமக்கு குற்றச் செயல்கள் தொடர்பில் இரகசியத் தகவல்கள் வழங்குவோரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.
“அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் பல சட்ட விரோத நடவடிக்கைகள், சுற்றிவளைப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
“அத்தோடு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் பிரிவில் நடமாடும் சேவைகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம் பொதுமக்கள் நன்மையடைந்து வருகின்றனர்.
“அத்துடன், வீதியில் பயணிக்கும் முறை, வாகனம் செலுத்துவது, விபத்திலிருந்து தவிர்ந்துக்கொள்வது தொடர்பிலும் பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும், விழிப்புணர்வுகளையும் நடத்தி வருகிறோம்” என்றார்.
11 minute ago
39 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
3 hours ago
4 hours ago