2021 ஜூன் 16, புதன்கிழமை

நீரில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

கல்பிட்டி சிறுகடலில் செவ்வாய்க்கிழமை (06) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த புத்தளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இருவருடன் இணைந்து மீன்பிடிப்பதற்காக உபகரணங்களுடன் சென்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இவர்,
திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இவரை மீட்டு கல்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதிலும், இவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .